உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு ; 18 காளைகளை அடக்கிய கார்த்திக்கிற்கு கார் பரிசு..!!

Author: Babu Lakshmanan
17 January 2024, 7:16 pm

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக்கிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த ஜல்லிக்கட்டை கொடியசைத்து திறந்து வைத்தார். காலை 7 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை ஒருமணிநேரம் கூடுதலாக நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை தீரமாக காளையர்கள் அடக்கினர். இறுதியில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றார். இவர் கடந்த 2022ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியிலும் காரை பரிசாக வென்றது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, 17 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர் 2-வது இடத்தில் உள்ளார். 12 காளைகளை அடக்கி குன்னத்தூர் திவாகர் 3-வது இடத்தில் உள்ளார்.

இதேபோன்று, போட்டியில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு தேர்வு செய்யப்பட்டது. அதற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அதோடு, நாட்டு மாடு மற்றும் கன்றுவும் பரிசாக கொடுக்கப்பட்டது. 2வது இடம் பிடித்த காளை மற்றும் வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?