பூமியை விசிட் பண்ண வரும் ஏலியன்ஸ்: ஏலியன் அனுமதியுடன் ஏலியனுக்கு கோவில் அமைத்த நபர்; சேலத்தில் விசித்திரம்..!!

Author: Sudha
2 August 2024, 4:04 pm

சேலத்தை அடுத்துள்ள மல்லமுப்பம்பட்டி பகுதியில் சிவ கைலாய ஆலயத்தில் இரட்டை ஆருடை சிவலிங்கம் அமைந்துள்ளது.இந்த கோயிலை லோகநாதன் என்ற சித்தர் பாக்யா நடத்தி வருகிறார்.

இந்த கோவிலில் ஏலியனுக்கு என தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே ஏலியனுக்காக சன்னிதி அமைக்கப்பட்ட ஒரே கோவில் இது மட்டுமே என்றும் சொல்லியுள்ளார் லோகநாதன்.

இந்த கோயிலை அமைப்பதற்கு முன்பாக ஏலியன் தெய்வங்கள் அனுமதி பெற்று அவர்கள் அனுமதி கொடுத்ததால் சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.மேலும் ஏலியனை வணங்கி மகிழ்ச்சி அடையுங்கள் என்றும், ஏலியனின் வருகை இனிவரும் காலங்களில் அதிகமாகும் என்றும் சொல்லியுள்ளார்.மேலும் அவர்கள் பார்ப்பதற்கு ஏலியன் போன்று இருக்க மாட்டார்கள் எனவும் நம்மைப் போன்று சாதாரண தோற்றத்தில் ஆண்,பெண் என இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் அனைத்தும் ஏலியனை குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஆனால் வெளியே சொல்லாமல் மறைக்கிறார்கள், ஏலியன்கள் உலகிற்கு தீங்கு செய்ய மாட்டார்கள்,அவர்களிடம் அளவில்லாத சக்தி உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.இந்த கோவில் பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • vadivelu is the first option for retro movie ரெட்ரோ படத்தில் வடிவேலு? சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர்? ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!