தமிழகத்தில் இன்று மாலை தொடங்கும் சூரிய கிரகணம்… கர்ப்பிணிகள், நோயாளிகள் கவனமாக இருக்க எச்சரிக்கை..!!

Author: Babu Lakshmanan
25 October 2022, 10:13 am

சென்னை : தமிழகத்தில் சூரிய கிரகணம் தென்படும் நிலையில், அதனை வெறும் கண்களில் பார்க்கக் கூடாது என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தினர்.

சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு வரும் போது சூரியனை நிலவு மறைக்கும் நிகழ்வாகும். அமாவாசை நாளில் தான் இந்த சூரிய கிரகணம் நிகழும். மழை இல்லாமல் இருந்தால் கிரகணத்தை தெளிவாக பார்க்கலாம். முழு சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் என்று மூன்று விதமான சூரிய கிரகணம் நடக்கிறது.

இன்றைய தினம் பகுதி நேர சூரிய கிரகணம் நிகழ்கிறது. சந்திரன் சூரியனுடைய ஒரு பகுதி மட்டும் மறைக்கும் போது ஏற்படுவது பகுதி நேர சூரியகிரகணம் ஆகும்.

வானத்தில் நிகழும் அதிசய நிகழ்வான சூரிய கிரகணம் இன்று மாலை நிகழ உள்ளது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் மாலை 4.29 மணிக்கு தென்படும். இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்படும். சூரிய கிரகணம் மாலை 4 மணி 29 நிமிடங்களுக்குத் தொடங்கி இதனுடைய உச்சகட்ட மறைப்பு நிலை மாலை 5 மணி 30 நிமிடங்களுக்கும், சூரியன் மறையும்போது 5 மணி 48 நிமிடமுமாகும்.

அதிகபட்சமாக குஜராத் மாநில துவாரகாவில் சூரிய கிரகணம் நீண்ட நேரம் நீடிக்கும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஊட்டி மற்றும் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும்.

சூரிய கிரகணத்தை பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்றும், கிரகணத்தின்போது சூரியனை வெறும் கண்களால் எளிதாக பார்க்க முடியும் என்பதால், அவ்வாறு 50 முதல் 90 விநாடிகள் பார்க்கும்போது, நமக்கு தெரியாமல் சூரியனின் கதிர்கள் கண்களின் விழித்திரையின் மத்திய பகுதியை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதேபோல, கிரகண சமயத்தில் கர்ப்பிணிகள் வெளியில் செல்லக்கூடாது என்றும், கிரகண நேரத்தில் உணவு சாப்பிடக்கூடாது என்றும் கடினமான கனமான பொருட்களை தூக்கக் கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • pushpa 2 trailer மரண மாஸில் அல்லு அர்ஜுன்….மிரட்டும் புஷ்பா 2 ட்ரெய்லர்…!
  • Views: - 462

    0

    0