இதல்லாம் ஒரு ஆட்சி.. வெங்காய திராவிட மாடல் ஆட்சி : கருணாநிதியின் சொந்த மாவட்டத்தில் அண்ணாமலை காட்டம்!!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே திருத்துறைப்பூண்டி மன்னார்குடி சட்டமன்ற தொகுதிகளில் இந்த பாதயாத்திரை நிறைவு செய்துள்ளார்.
இந்த நிலையில் மீதமுள்ள நாகை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நன்னிலம் திருவாரூர் சட்டமன்ற தொகுதிகளில் இன்று பாதயாத்திரை நிகழ்ச்சியை தொடங்கினார். முதலாவதாக நன்னிலத்தில் மாப்பிள்ளை குப்பம் பகுதியில் தொடங்கி நன்னிலம் பேருந்து நிலையம் சென்று அங்கு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் பின்தங்கி ஐந்து மாவட்டங்களில் ஒரு மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் அமைந்துள்ளது இது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சொந்த மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு திருவாரூர் மாவட்டம் வளர்ச்சி அடையாமல் உள்ளது இதற்கு திராவிட மாடல் என சொல்லிக் கொள்ளும் திமுக கட்சி தான் காரணம் என பேசினார்.
நன்னிலம் சட்டமன்ற தொகுதி பெருமை வாய்ந்த தொகுதி இந்த தொகுதியில் உலகத்திலேயே சரஸ்வதி அம்மனுக்காக தனி ஆலயம் உள்ள கூத்தனூர் சரஸ்வதி கோயில் உள்ளது தமிழ் தாத்தா உவேசா பிறந்த ஊர் இந்த நன்னிடம் சட்டமன்ற தொகுதியில் தான் உள்ளது என்று பேசினார்.
திருவாரூர் மாவட்டம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் 33 மாவட்டங்களை தாண்டி உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள 80 சதவீத மாவட்டங்களை விட திருவாரூர் மாவட்டம் பின்தங்கி உள்ளது.
அந்த அளவுக்கு திருவாரூர் மாவட்டம் பின்தங்கி உள்ளது தேர்தல் நேரத்தில் மட்டும் திமுக கட்சியின் வருவார்கள் வாக்கு வாங்கி செல்வார்கள் அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் வரமாட்டார்கள். இந்த நாகை நாடாளுமன்ற தொகுதி தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் மிகவும் பின்தங்கிய நாடாளுமன்ற தொகுதி இதனை மோடி ஒருவரால் மட்டும் நல்ல முறையில் மாற்ற முடியும் என்று பேசினார்
தமிழக பள்ளிகளில் 30 சதவீத பட்டியல் இன குழந்தைகளுக்கு ஜாதி பாகுபாடு காட்டப்படுவதாகவும் அதை மாணவர்கள கூறியதாகவும் அவர்கள் கழிவறையை கழுவுவதற்கும் விளையாட்டில் முன்னுரிமை கொடுக்கப்படாமலும் பள்ளிகளில் இரண்டு டம்ளர்கள் இருப்பதும் அதை அவர்களே கூறியதும் வேதனை அளிக்கிறது என்று பேசினார்
ஜாதி ஜாதி என்று ஆட்சியைப் பிடித்த திமுக ஆட்சியில் ஜாதி சண்டைகள் நடக்கின்றன. ஜாதி வன்கொடுமைகள் நடக்கின்றன அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரம் ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டப்பட்ட செந்தில் பாலாஜிக்கு மாதம் ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறது. அவர் இன்னும் அமைச்சரவையில் இருந்து ஏன் தூக்கவில்லை மேலும் இன்னும் ஒரு மாதத்திற்குள் பொன்முடி அவர்களும் உடன் செல்வார். மேலும் 11 அமைச்சர்கள் மீது வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அவர்களும் சிறை செல்வார்கள் என்று பேசினார்
என்ன வெங்காய திராவிட மாடல் ஆட்சி 70 ஆண்டு காலமாக திமுக தமிழகத்தை ஆண்டு வருகிறது ஒரு கூலி தொழிலாளி தொழிலாளியாகவே இருக்கிறார் .
அவருடைய முன்னோர்களும் அதே குளித்து தொழிலாளி அவர்களுடைய பிள்ளைகளும் அதே கூலி தொழிலாளி என்ன வெங்காய திராவிட மாடல் ஆட்சி என்று பேசினார்
டிசம்பர் 15ஆம் தேதி கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் மேகதாது அணை கட்டுவோம் என்று கூறினார் டிசம்பர் 19ஆம் தேதி இந்தியா கூட்டணி மாநாட்டுக்கு செல்லும் முதல்வர் அவர்கள் அது பற்றி எதுவும் பேசவில்லை ஆறு மாதமாக காவிரி விவகாரம் குறித்து பேச மறுக்கிறார்.
அவர் தன்னை டெல்டா காரன் டெல்டா காரன் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார். உண்மையாகவே நரேந்திர மோடி தான் டெல்டாக்காரன் 2018ல் காவிரி நதிநீர் ஆணையம் உருவாக்கியது திமுக கொண்டு வந்த மீத்தேன் திட்டத்தை விவசாயிகள் எதிர்த்த பொழுது அதை கைவிட்டது நிலக்கரி எடுக்கும் திட்டத்தை விவசாய எதிர்த்த போது அதையும் கைவிட்டது ஆகவே நரேந்திர மோடி தான் உண்மையான டெல்டாகாராக உள்ளார்.
அடுத்த முறையும் மோடி ஆட்சிதான் 400 இடங்களுக்கு மேல் பிடிப்போம் தமிழகத்தில் 39/ 39 கிடைத்தால் 450 இலக்கையும் அடைவோம்
தென் மாவட்டங்களில் வெள்ளம் வந்து ஐந்து நாள் கழித்து தான் முதல்வர் சொல்கிறார அவர் போட்டோ சூட் எடுக்க தான் சொல்கிறார்
என்று பேசினார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.