420களை செய்தவர்கள் எல்லாம் 400ஐ பற்றி பேசுகிறார்கள்.. பாஜக குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் தாக்கு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2024, 9:53 am

420களை செய்தவர்கள் எல்லாம் 400ஐ பற்றி பேசுகிறார்கள்.. பாஜக குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் தாக்கு!!

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும், அதிகப்பட்சமாக 400 இடங்களை வெல்லும் என்றும், இதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூட சொல்கிறார் என குறிப்பிட்டிருந்தார்.

பாஜகவின் செயல்பாடுகளை அவ்வப்போது வெளிப்படையாக விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடியின் இந்த கருத்து குறித்தும் விமர்சனம் செய்துள்ளார்.

அவர் கூறியதாவது, 420 (மோசடி) செய்தவர்கள் மட்டுமே தேர்தலில் 400 இடங்களை பிடிப்பதை பற்றி பேசி வருகிறார்கள். காங்கிரஸ் அல்லது மற்ற கட்சிகளாக இருந்தாலும் சரி, அவ்வாறு தெரிவித்தால், அது அவர்களின் ஆணவத்தை பிரதிபலிப்பதாகும்.

மக்கள் வாய்ப்பு அளித்தால் மட்டுமே நீங்கள் உங்களுடைய ஒரு தொகுதியில் வெற்றிபெற முடியும். இத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என எந்தவொரும் கட்சியும் கூற முடியாது. அப்படி கூறும் என்றால் அது அவர்களின் ஆணவம்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 334

    0

    0