கூடுதல் தொகுதிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள்.. திக்கு முக்காடும் திமுக : சிபிஎம் வைத்த கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2024, 12:20 pm

கூடுதல் தொகுதிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள்.. திக்கு முக்காடும் திமுக : சிபிஎம் வைத்த கோரிக்கை!!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. இந்த நிலையில், இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் சிபிஎம் குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இந்த சந்திப்பின்போது, சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் சம்பத், சண்முகம், கனகராஜ் உள்ளிட்டோர் திமுக குழுவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தைக்கு பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக பேட்டியளித்துள்ளார்.

திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையேயான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. கடந்தமுறை போட்டியிட்டதை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று கூறிஉள்ளார். அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்ப பட்டியலில், மதுரை, கோயம்புத்தூர், தென்காசி, கன்னியாகுமரி, நாகபட்டினம் ஆகிய 5 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!