நான் பொய் சொல்றேனா? திமுக வாக்குறுதியில் 98% நிறைவேற்றம் என CM சொன்னது பச்சை பொய் : இபிஎஸ் காட்டம்!
மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்காக அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாட்டுத்தாவணி காய்கறி, பழ சந்தைகளில் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “அதிமுகவுக்கு ஒரே நிலைப்பாடு. அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளோம். பிடித்தம் இல்லாமல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கொடுத்தோம்.
அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் கொடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்த ஸ்டாலின் அதை நடைமுறைப்படுத்தவில்லை.
சர்க்கரை என்று சொன்னால் இனிக்காது, அதை வாயில் போட்டால் தான் இனிக்கும். 3 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் இப்போது தேர்தல் வந்தவுடன் சொல்கிறார். இது திமுகவின் வாடிக்கை.
திராவிட கட்சிகளால் எந்த பயனும் இல்லையென்றால் அன்புமணி ஏன் எங்களுடன் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டிருந்தார்? ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களுக்கு ஒவ்வொரு நிலைப்பாடு. நிலையான கொள்கை இல்லாத கட்சி பாமக.
ஜெயலலிதா குறித்து ராஜ்நாத் சிங் புகழ்வது மகிழ்ச்சி. எதிரணியில், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கூட எங்கள் தலைவர்களை புகழ்ந்து பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நல்லது செய்தால் பாராட்டுவது இயல்பு. மறைந்த தலைவர்களை பாராட்டுவது மரபு. இன்று நாங்கள் அவர்களை எதிர்க்கிறோம், எப்படி எங்களை நேரடியாக பாராட்டுவார்கள்?
திமுக கார்பரேட் கம்பெனி. அதிமுகவில் நான் ஒரு தொண்டன், தலைவன் அல்ல. அதிமுகவில் 100% வாரிசு அரசியல் இல்லை. எனக்கு பின்னால் யாரோ ஒரு தொண்டன் தான் தலைமை பொறுப்புக்கு வருவார்.
ஆனால் திமுகவில் அப்படியல்ல. திமுக கட்சியை ஸ்டாலின் குத்தகைக்கு எடுத்து நடத்தி கொண்டிருக்கிறார் ஸ்டாலின். வாரிசு அரசியல் என்பது கட்சியின் தலைமை பொறுப்புக்கு யார் வருகிறார் என்பதை பொறுத்தது. தேர்தலில் போட்டியிடுவது வாரிசு அரசியல் ஆகாது.
தேர்தல் அறிக்கையில் 98% நிறைவேற்றி விட்டோம் என சொன்னார் ஸ்டாலின். அது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்?” என தெரிவித்தார்
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.