தலைமறைவான பாஜக முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது… பரபரப்பில் பாஜக : நடந்தது என்ன?!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2023, 6:39 pm

தலைமறைவான முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது… பரபரப்பில் பாஜக : நடந்தது என்ன?!!

பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய விவகாரம் தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையரகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, மாநகராட்சியிடம் முன் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை நட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொடிக்கம்பத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது பாஜகவினர் போராட்டம் செய்தனர். பாஜகவினர் மாநகராட்சிக்கு சொந்தமான ஜே.சி.பி இயந்திரத்தை உடைத்தனர். 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 5 பேரை சிறையில் அடைத்துள்ளதாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியும் அடங்குவார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ