சங்க்பரிவார் அமைப்புகள் கையில் எடுத்திருக்கும் அடுத்த ஆயுதம் அம்பேத்கர் : விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம்!!
Author: Udayachandran RadhaKrishnan12 December 2022, 12:23 pm
ராணிப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் தலித் கே.சந்திரன் அவர்களின் திருமண விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தந்தை பெரியார், திருவள்ளுவர், பேரறிஞர் அண்ணா ஆகியோரை தொடர்ந்து தற்பொழுது புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை சங்க்பரிவார் அமைப்புகள் இழிவு படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
ஆன்லைன் ரம்மி தொடர்பான பிரச்சனையை விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் எழுப்பும் என தெரிவித்த அவர் பாட்டாளி மக்கள் கட்சி எதிர் முகாமில் இருந்தாலும் பாராட்டக்கூடிய அளவிற்கு திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ், அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார், ராணிப்பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மாவட்ட துணைச் செயலாளர் தமிழ், செய்தி தொடர்பாளர் சசிகுமார், ராணிப்பேட்டை தொகுதி செயலாளர் மாந்தாங்கல் ராஜா, நகர செயலாளர் ராஜசேகர் நகர மன்ற உறுப்பினர் நரேஷ் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்