உலக அதிபர்களை பாதித்த வயநாடு நிலச்சரிவு: வருத்தத்தில் பிரதமர் மோடிக்கு அனுப்பிய தகவல்….!!

Author: Sudha
4 August 2024, 5:12 pm

கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான நிலைச்சரிவில் சிக்கி 359 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன்,ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

சீனப் பிரதமர் லி கியாங், பிரதமர் மோடிக்கு செய்தி அனுப்பி உள்ளார்.அதில், கேரளாவில் ஏற்பட்ட பேரழிவில் பலர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு சீன அரசு சார்பில் இரங்கல் தெரிவிக்கிறேன் எனக்கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சோகமான நிகழ்வில் மீட்பு பணிகள் மேற்கொண்டு வருபவர்களின் துணிச்சலையும் பாராட்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,கேரள நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை தெரிவிக்கவும் , காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 207

    0

    0