தமிழகம் வருகிறார் அமித்ஷா… ரோடுஷோ நடத்த ஏற்பாடு : தேதியுடன் தொகுதியும் அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2024, 4:59 pm

தமிழகம் வருகிறார் அமித்ஷா… ரோடுஷோ நடத்த ஏற்பாடு : தேதியுடன் தொகுதியும் அறிவிப்பு!

தமிழகத்தில் ஏப்.,19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நேற்றும், இன்றும் பிரதமர் மோடி சென்னை, வேலூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் தமிழகம் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்திற்கு ஏப்.,12ம் தேதி மாலை 3:05 மணிக்கு வரும் அமித்ஷா, அங்கிருந்து சிவகங்கைக்கு ஹெலிகாப்டர் மூலமாக செல்கிறார்.

பா.ஜ.க, வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து அங்கு மாலை 3:50 மணிக்கு 2 கி.மீ தூரம் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர் 5 மணிக்கு கோட்டை பைரவர் கோயில், ராஜராஜேஸ்வரி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் ஹெலிகாப்டரில் மதுரை திரும்புகிறார்.

மதுரையில் பா.ஜ.க வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து 2 கி.மீ தூரம் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இரவு 7:30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார்.

பின்னர் மதுரை கோர்ட்யார்டு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து, 13ம் தேதி காலை 8:30 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிளம்பி செல்கிறார்.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!