அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த அமித்ஷா.. ஒரே ஒரு வார்த்தையால் உற்சாகமான அதிமுக!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2023, 9:40 am

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் ஆட்சியின் போது, குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிக்க வைக்க சிபிஐ மூலம் எனக்கு அழுத்தம் கொடுத்தனர்.

இதையெல்லாம் ஒருபோதும் பாஜக பெரிதுபடுத்தவில்லை. மத்திய அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது சரியல்ல என்று கூறினார்.

அதனை தொடர்ந்து அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறோம். அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!