அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்… நாடாளுமன்ற தேர்தல் குறித்து வியூகம் : தென்சென்னை தொகுதி பாஜக நிர்வாகிகள் உற்சாகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2023, 1:27 pm

தமிழகத்தில் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு விமானம் மூலம் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா சென்னை வந்தார். நேற்று இரவு முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதனை தொடர்ந்து, இன்றுசென்னை கேளம்பாக்கத்தில் தென் சென்னை பகுதி பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை பகுதியில் பாஜக நேரடியாக களமிறங்க களப்பணி ஆற்றி வருகிறது இந்த விவரம் தொடர்பாக தான் தென் சென்னை பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என கூறப்படுகிறது

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!