தமிழரை பிரதமராக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்து மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது : டிகேஎஸ் இளங்கோவன்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2023, 8:03 pm

தமிழரை பிரதமராக்க வேண்டும் என அமித்ஷா பேசியது மக்களை ஏமாற்றும் செயல் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அமித்ஷா இருநாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். இன்று வேலூர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், ‘தமிழரை பிரதமராக்க வேண்டும்’ என்று பேசியிருந்தார். அவருடைய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், அமித்ஷாவின் பேச்சு குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தென் சென்னையில் பாஜக மூத்த தலைவர்களே தோல்வியடைந்ததாக குறிப்பிட்டார்.

தமிழர்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுவரை ஏற்கவில்லை; இனிமேலும் ஏற்க மாட்டார்கள். தமிழர்களுக்கு விரோதமான கட்சியாக பார்க்கிறார்கள் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டுமே தமிழைப் பற்றி அமித்ஷா பேசுவார். வடநாட்டிற்குச் சென்றால் இந்திதான் என பேசுவார். தமிழரை பிரதமராக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்து மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது என்று தெரிவித்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி