திமுக கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார்…? அதிமுக தனித்து போட்டியிடுவதே இதுக்காகத்தான் ; டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..!!!

Author: Babu Lakshmanan
4 April 2024, 9:35 am

திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணியினர் யார் பிரதமர் வேட்பாளர் என்று தெரியாமலேயே வாக்கு கேட்கின்றனர் என்று திருச்சியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகத்தில் இரண்டு தொகுதிகள் போட்டியிடுகின்றனர். டிடிவி.தினகரன் தேனி நாடாளுமன்ற தொகுதிகளிலும், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் செந்தில்நாதனும் போட்டியிடுகின்றனர்.

மேலும் படிக்க: ‘டிக்கெட்டை எடு’… கேள்வி கேட்ட டிக்கெட் பரிசோதகர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை… வடமாநில தொழிலாளி கைது…!!

திருச்சியில் போட்டியிடும் செந்தில்நாதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வகையில் டிடிவி தினகரன் திருச்சி சங்கிலியாண்ட பரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:- தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்தியாவின் வளர்ச்சிக்காக, தமிழகத்துக்கு திட்டங்களை பெற்றுத்தர, நாட்டின் பாதுகாப்புக்காகவும் நீங்கள் வாக்களிக்க வேண்டும். மீண்டும் பிரதமராக வர இருக்கின்ற அவர்தான் எங்களுடைய வேட்பாளர். திமுக கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்.

திமுக கூட்டணியில் யாரை பிரதமர் ஆக்குவதற்கு வாக்கு கேட்கின்றனர். மக்கள் அவர்களிடம் கேட்க வேண்டும், இன்னொரு கட்சி இருக்கிறது மெகா கூட்டணி இரட்டை இலைக்கு ஓட்டு போட வேண்டும் என்று கேட்கின்றனர். யார் பிரதமராக வேண்டுமென வாக்கு கேட்கின்றார்கள்.

மேலும் படிக்க: ஓட்டு கேட்க வராதீங்க…ரவுண்டு கட்டும் பொதுமக்கள்… திக்கு முக்காடும் திமுக அரசு!

மோடியை பிரதமர் ஆக்குவதற்கு வாக்களிக்க இருக்கிறார்களே, அதை தடுப்பதற்கு ஸ்டாலினுக்கு எதிரான வாக்குகளை பிரிப்பதற்கு, பழனிசாமி கடந்த நான்கு ஆண்டுகள் தான் செய்த ஊழல்களை முறைகேடுகளை காரணம் காட்டி, முன்னாள் அமைச்சர்களை கைது செய்யக்கூடாது என்பதற்காக, திமுகவுக்கு மறைமுகமாக இந்த தேர்தலில் புரட்சித்தலைவர், அம்மா கட்டிக் காத்தபெற்ற வெற்றி சின்னத்தை திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கள்ளத்தனமாக பயன்படுத்துகின்றனர் என்பது தான் உண்மை.

மதுரையில் பாஜக சார்பில் ராம சீனிவாசனும், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக இரட்டை இலைகள் போட்டியிடுகிறவர் யார் தெரியுமா..? புரட்சித்தலைவரை 77இல் அவருக்கு எதிராக திமுகவில் போட்டியிட்ட பாலுசாமிதேவரின் மகன் தான் இப்போது போட்டியிடுகிறார். மதுரையில் இரட்டை இலைகள் போட்டியிடுகிறவர் யார் என்றால், அம்மா மருத்துவமனையில் இருந்தபோது, அப்போது மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்த இடைத்தேர்தலில் திமுகவின் சார்பில் போட்டியிட்டவர் மருத்துவர் சரவணன்.

அம்மா அவர்கள் மருத்துவமனையில் இருந்த போது சின்னம் கொடுப்பதற்காக கொடுத்த விண்ணப்பத்தில் அவரது கையெழுத்துயிட முடியாததால், அவரது கைநாட்டை வாங்கி கொடுத்ததால், அது அவரது கைநாட்டு இல்லை என கூறியும், அவர் உயிரோடு இல்லை என கூறி வழக்கு தொடுத்தவர் தான் சரவணன்.
அப்படிப்பட்டவர்களை எல்லாம் இரட்டை இலையில் போட்டியிட வைக்கின்ற மோசமான நிலைமை கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

திமுகவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர 2026 இல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராகிய செந்தில்நாதனுக்கு வாக்களிக்க வேண்டும். சென்னை ஆர் கே நகரில் அம்மா இறந்த பின்னர் நான் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்த குக்கர் சின்னம். அப்போது திமுக டெபாசிட் இழந்தது, பழனிசாமி மண்ணை கவ்வ வைத்த சின்னம் குக்கர், என பேசினார்.

பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி ராஜசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 359

    0

    0