இனி எல்லாம் அவரோடு தான்.. ஓபிஎஸ்-க்கு YES… பாஜகவுக்கு NO… டிடிவி தினகரன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
Author: Babu Lakshmanan27 July 2023, 8:10 pm
2024 மக்களவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அமமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர் செவத்துடன் இணைந்து அமமுக சந்திக்கும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இல்லை, எனக் கூறினார்.
கோடநாடு வழக்கில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி தேனியில் ஓபிஎஸ் நடத்தவிருக்கும் போராட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் இருவரும் கைகோர்த்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து கழற்றிவிடப்பட்ட ஓபிஎஸ் சட்டப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், சசிகலா மற்றும் டிடிவி தினகரனுடன் இணைந்து கட்சியை மீட்டெடுப்போம் எனக் கூறியிருந்தார். இந்த சூழலில் இருவரும் கைகோர்த்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.