பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு… மோடி மீண்டும் பிரதமராக அமமுக அணிலாக செயல்படும் ; டிடிவி தினகரன்..!!

Author: Babu Lakshmanan
11 மார்ச் 2024, 6:37 மணி
Quick Share

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை பாஜகவிற்கு அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் திமுக அரசை கண்டித்து திருச்சி சிந்தாமணி சாலையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகை தந்தார். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- அமமுகவின் நிபந்தனையற்ற ஆதரவை நான் பாஜகவிற்கு கொடுத்திருக்கிறேன். நரேந்திர மோடி தான் பிரதமராக போகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

நாங்கள் unconditionalஆக தொடர்ந்து நாங்கள் பா.ஜ.கவிற்கு ஆதரவு கொடுத்து வந்தோம். நாங்கள் எத்தனை இடத்தில் போட்டியிடுகிறோம்? எத்தனை தொகுதி எங்களுக்கு கொடுக்கிறார்கள் என்பதெல்லாம் முக்கியமல்ல. குறிப்பிட்ட சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று பாஜக போன்ற எந்த கட்சிகளும் எங்களுக்கு வற்புறுத்த வில்லை. நாங்கள் மாநில கட்சி என்ற அந்தஸ்தில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம்.

நிபந்தனையற்ற ஆதரவை நாங்கள் பாஜகவிற்கு தருகிறோம் என்பதை நாங்கள் தெரிவிக்கின்றோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும். கிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த தலைவர்கள் நன்கு அறிமுகமானவர்கள். அடுத்து அடுத்து பேச்சுவார்த்தை இருக்கும்.

அமமுகவும், பா.ஜ.கவிற்கு ஆதரவு முழு ஆதரவை அழித்து வருகிறது. அதிகாரப்பூர்வமாக அண்ணாமலை இன்று என்னிடம் தொடர்பு கொண்டார். இந்த காலகட்டத்திற்கு தமிழ்நாட்டிற்கு எது தேவையோ அதன் அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம், என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி ஏற்பட்டால் நீங்கள் பிரச்சாரத்திற்கு செல்வீர்களா கேள்விக்கு, அப்படி ஏற்பட்டால் பின்னர் பார்க்கலாம், எனக் கூறினார்.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி உடன் மீண்டும் சேர்த்து பயணிக்க வாய்ப்பு உண்டா? என்ற கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி துரோக சிந்தனை விட்டு வந்தால் அவரோடு கூட பயணிக்கலாம். அம்மா இல்லை என்றாலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அவர்களது லட்சியத்தை தாங்கி செல்கிறோம். எங்களுடைய நிலைப்பாடு தற்போது பாஜகவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவை தருகிறோம், என கூறினார்.

  • Beggar பிச்சைக்காரரிடம் கடன் வாங்கிய தொழிலதிபர்.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்!
  • Views: - 299

    0

    0