தூத்துக்குடி தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயுக்கசிவு; 30 பேர் பாதிப்பு

Author: Sudha
20 ஜூலை 2024, 9:57 காலை
Quick Share

தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று நள்ளிரவில் இந்த ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு காரணமாக 21 பெண் ஊழியர்கள் மூச்சுத்திணறல் காரணமாக மயக்கம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு அந்த ஆலையில் திடீரென அமோனியா வாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த ஆலை முழுவதும் அமோனியா வாயு பரவியதால், அங்கு பணியில் இருந்த மொத்தம் 30 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த அம்மோனியா கசிவு தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் முரளி தலைமையிலான குழுவினர் அந்த தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 203

    0

    0