6 மாதமாக 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. அண்ணன் முறை உறவினரான 16 வயது சிறுவனின் கோரம்.. 3 பேர் அரங்கேற்றிய கொடூரம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2024, 1:18 pm
Harass
Quick Share

சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலியால் துடித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற உறவுக்கார பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

விசாரணையில், 11 வயது சிறுமிக்கு உறவுக்கார சிறுவன், அவனது நண்பன் உட்பட மேலும் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுபோதைக்கு அடிமையான சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை சரிவர கவனிக்கவில்லை என தெரிகிறது. இதனை பயன்படுத்திக்கொண்ட அந்த நபர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளனர்.

மேலும் படிக்க: வீட்டு வேலை செய்ய துபாய் சென்ற பெண்ணுக்கு துன்புறுத்தல்.. மனைவியை மீட்க கோரி மகனுடன் மனு அளித்த கணவன்!

சிறுமியை பார்க்க வந்த உறவுக்கார பெண் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது தெரிந்ததும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

சுமார் 6 மாத காலம் தொடர்ந்து இந்த கொடூரம் நிகழ்ந்ததும் பின்னர் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, சென்னை வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து போக்ஸோ வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் போலீசார், முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள குமார் எனும் டெய்லரை கைது செய்தனர்.

அதன்பின்னர், மேற்கொண்ட விசாரணையில் சிறுமியின் பெரியப்பா மகன் 16 வயது சிறுவனும்,அவனது நண்பனும் இச்சம்பவத்தில் ஈடுப்பட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது போக்ஸோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Views: - 187

0

0