டிரெண்டிங்

தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக.. தேதியுடன் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசியலில் களம் இறங்கியுள்ள விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சியின் கொடி மற்றும் பாடலையும் வெளியிட்டு அசத்தினார்.

இதனையடுத்து தனது முதல் அரசியல் மாநாடு தொடர்பாகவும் அறிவித்தார். அதன் படி தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் கடைசியாக விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.

செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு தொடர்பான அறிவிப்பும் வெளியானது. இதனையடுத்து மாநாடு நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்ட போலீசார் 21 கேள்விகளை கேட்டிருந்தனர். இதனை தொடர்ந்து 21 கேள்விகளுக்கும் பதில் அளித்த நிலையில், 33 நிபந்தனைகளோடு மாநாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி மாநாடு நடைபெறுவதற்கு எந்தவித பணிகளும் தொடங்கவில்லை.

புற்கள் கூட வெட்டாத காரணத்தால் மாநாடு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து மாநாடு அக்டோபர் மாதம் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

எனவே புதிய தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என தவெக நிர்வாகிகள் காத்திருந்தனர்.

இந்தநிலையில் மாநாடு தேதி தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது.

கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024), மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் படிக்க: அப்பு பிரியாணி கடையை தொடர்ந்து SS ஹைதராபாத் பிரியாணி கடைக்கும் ஆப்பு.. சீல் வைத்த அதிகாரிகள்!

நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.

தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்! இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன். விரைவில் சந்திப்போம்!! வாகை சூடுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

2 முறை கருக்கலைப்பு.. திருமணத்திற்கு வற்புறுத்திய இளம்பெண் : நடுக்காட்டில் பயங்கரம்!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…

11 minutes ago

எங்க பாட்டுதானே ஜெயிக்க வைக்குது; காசு கொடுத்தா என்ன? – கண்டபடி கேட்ட கங்கை அமரன்

5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…

1 hour ago

திமுக அலுவலகத்தில் மேல் தளத்தில் ரெய்டு.. கீழ் தளத்தில் பேக்கரி டீலிங் ; இபிஎஸ் பதிலடி!

இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…

1 hour ago

திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே கர்ப்பம்; அப்பா யார்னு கேட்பாங்களே? விஜய் டிவி பிரியங்காவின் பகீர் பின்னணி

டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…

3 hours ago

பேக்கரி டீலிங்… நீட் தேர்வு குறித்து காரசாரம் : அமைச்சருக்கு அதிமுக கடும் எதிர்ப்பு!

நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…

3 hours ago

விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!

அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து  கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…

4 hours ago

This website uses cookies.