நிச்சயதார்த்தம் முடித்த கையோடு வருங்கால மனைவியை அழைத்து வந்த ஆனந்த் அம்பானி : திருப்பதி கோவிலுக்கு விசிட்!!
Author: Udayachandran RadhaKrishnan26 January 2023, 1:26 pm
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த அம்பானி இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற திருப்பாவாடை சேவையில் தன்னுடைய வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்டுடன் கலந்துகொண்டு சாமி கும்பிட்டார்.
ஆனந்த் அம்பானி, ராதிகா மெர் சென்ட் திருமண நிச்சயதார்த்தம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த நிலையில் திருப்பதி மலைக்கு வந்த அவர்கள் இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று திருப்பாவாடை சேவையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன.