உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது.. அலட்சியமா..? இல்ல, வேறு காரணமா..? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி..!

Author: Babu Lakshmanan
5 October 2022, 9:53 pm

உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த ஜூலை மாதம் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அணைக்கரை மதகு சாலையைச் சேர்ந்த ஆகாஷ், மனோஜ், ராஜேஷ் ஆகியோர் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, அடுத்த சில நாட்களில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அப்போதே வலியுறுத்தியிருந்தேன். எனினும், அவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஆனால், இப்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது. இந்தத் தவறுக்கு அதிகாரிகளின் அலட்சியம் காரணமா அல்லது வேறு காரணமா? என்பது தெரியவில்லை.

நடந்த தவறை சரி செய்யும் வகையில் ஜூலை மாதம் இறந்த மூவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில், தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற சுற்றுலாப் பயணிகள் 6 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

  • Ajithkumar in GBU இன்னும் ஏழே நாள் தான்.. Good Bad Ugly செம அப்டேட்!
  • Views: - 452

    0

    0