இந்த விஷயத்துல மத்திய அரசோடு கைகோர்த்து நடங்க… அதுதா நமக்கு நல்லது : தமிழக அரசுக்கு அன்புமணி அட்வைஸ்!!

Author: Babu Lakshmanan
1 March 2022, 12:02 pm
Quick Share

தமிழகம் வளர்ச்சியடைய மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக இளைஞரணி செயலாளரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்காக தமிழக அரசின் சார்பில் நிலங்களை முறையாக ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, நிலத்தை கையகப்படுத்தி விரைந்து வழங்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை முடிப்பதற்காக, மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக இளைஞரணி செயலாளரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் மண் பற்றாக்குறையால் 1572 கி.மீ நீளத்திற்கான 45 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் முடங்கி கிடப்பதாகவும், அவற்றை விரைவுபடுத்த ஒத்துழைக்கும்படியும் தலைமைச் செயலருக்கு, மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். நெடுஞ்சாலைப் பணிகள் முடங்குவது வளர்ச்சிக்கு நல்லதல்ல!

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு 8.70 கோடி கன அடி மண் தேவைப்படும் நிலையில், இப்போது வழங்கப்படும் வேகத்தில் மண் வெட்ட அனுமதி வழங்கப்பட்டால் இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் கூட இந்த பணிகள் முடியாது என்பதால், அனுமதி வழங்குவதை அரசு விரைவுபடுத்த வேண்டும்!

நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தி தருவதில் நிலைமை மேம்பட்டுள்ள நிலையில், மண் அள்ளும் அனுமதியையும் தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்துவதில் மத்திய அரசுக்கு ஒத்துழைத்து, அதன் மூலம் தமிழக வளர்ச்சிக்கும் வழிவகுக்க வேண்டும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 1397

    0

    0