கையெடுத்து கெஞ்சி கேட்கிறேன்.. கையெழுத்து போடுங்க : ஆளுநருக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2023, 2:08 pm

சேலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டிளிக்கையில்;- என்எல்சி 3வது சுரங்கம் சேத்தியாதோப்பு, புதிய வீராணம், பாளையங்கோட்டை, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 6 நிலக்கரி சுரங்கத்திற்கு நாங்கள் அனுமதி கொடுக்கமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போதைய சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தாய் மொழி படிக்காமல் பட்டம் பெறும் ஒரே மாநிலம் தமிழகம்தான். இந்த பெருமை திராவிட கட்சிகளுக்குதான் சேரும். தமிழகத்தில் எங்கே தமிழ் எனும் நிலைதான் உள்ளது.

நீட் தேர்வு 100% தேவையில்லை. திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிவிட்டு, 2 ஆண்டுகள் ஆகியும் ஒன்றும் செய்யவில்லை.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்து இடாதது ஏன் என தெரியவில்லை. ஆளுநரை கையெடுத்து கும்பிடுறேன். தடை சட்டத்துக்கு கையெழுத்து போடுங்க. தமிழ்நாட்டு இளைஞர்களை காப்பாத்துங்க என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ