முதலமைச்சர் ஸ்டாலினுடன், அன்புமணி சந்திப்பு : 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியா? அரசியலில் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan18 February 2023, 1:42 pm
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
என்.எல்.சி விவகாரம், வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரம் ஆகியவை குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பற்றி இருவரும் பேசினார்களா என்ற கேள்வி அரசியல் கட்சியினருடையே எழுந்துள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டிஅளித்த அன்புமணி ராமதாஸ், வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக முதல் அமைச்சரை சந்தித்து பேசினேன்’ என்றார்.