நகரி தொகுதியில் மீண்டும் போட்டி… வேட்புமனுவோட தமிழகம் வந்த அமைச்சர் ரோஜா ; திருத்தணியில் சென்டிமென்ட்..!!!
Author: Babu Lakshmanan20 April 2024, 10:57 am
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர்,ரோஜா திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சரும், பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா தனது குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருக்கோயில் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் மற்றும் மலர் மாலைகள் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: வார இறுதியில் சற்று ஆறுதல்… இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை தெரியுமா..?
ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் சார்பில் மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று அந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்
அந்த வேட்பு மனுவை திருத்தணி முருகன் கோயில் மூலவர் முருகப்பெருமான் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தும் மற்றும் திருத்தணி முருகன் கோயிலில் உபயோகிலான செல்வ விநாயகர் பிரபல திருக்கோயிலிலும் வேட்பு மனுவை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து அமைச்சர் ரோஜா எடுத்துச் சென்றார்.