திமுக ஆட்சியில் மேகதாது விவகாரத்தில் மவுனியாக இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்தது போலவே பாலாறு விவகாரத்திலும் செயலற்ற நிலையில் இருப்பது கண்டனத்திற்குறியது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா குப்பம் சாந்திபுரம் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, புதிய தடுப்பணைக்கு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்தார்.
இதற்கிடையே, பாலாற்று பகுதியில் புதிய தடுப்பணை கட்டுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் எனத் தமிழக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பாலாற்றில் அணை கட்டும் ஆந்திர அரசுக்கு தமிழக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டவுள்ள ஆந்திர மாநில அரசுக்கும், தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களுக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கும் இந்த விடியா திமுக அரசின் முதல்வருக்கும் எனது கடும் கண்டனங்கள்.
சர்வதேச நதிநீர் பங்கீடு கொள்கையின்படி நதியின் கீழ்ப் பகுதியில் இருக்கும் மாநிலங்களுக்கே நதிநீரின் பங்கீட்டில் அதிக உரிமை உள்ளது. 222 கிலோமீட்டர் தூரம் தமிழ்நாட்டில் செல்லும் பாலாற்று நீரை, வெறும் 33 கிலோமீட்டர்களுக்கு பாலாறு நீர்வழியைக் கொண்டிருக்கும் ஆந்திர மாநிலம் ஏற்கனவே 22 தடுப்பணைகள் கொண்டு தடுத்திருக்கும் நிலையில், தற்போது மீண்டும் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டுவது அனுமதிக்க இயலாத செயலாகும்.
இதனை உரிமையோடு நின்று குரல் கொடுத்து தடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, இந்த விடியா திமுக ஆட்சியில் மேகதாது விவகாரத்தில் மவுனியாக இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்தது போலவே பாலாறு விவகாரத்திலும் செயலற்ற நிலையில் இருப்பது கண்டனத்திற்குறியது.
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் வடமாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்கு பெரும் பங்கு வகிக்கும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் செயலை உரிய சட்ட நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பாலைவனங்களாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
This website uses cookies.