திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு? ஜெகன் மோகன் மீது முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு!
Author: Udayachandran RadhaKrishnan19 September 2024, 11:27 am
சந்திரபாபு நாயுடு தலைமையிலான என் டி ஏ கூட்டணி ஆட்சி ஆந்திராவில் அமைந்து இன்றுடன் 100 நாட்கள் ஆகிவிட்டது இதனை முன்னிட்டு விஜயவாடா சமீபத்தில் உள்ள மங்களகிரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பேசிய பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த ஆட்சியின் போது திருப்பதி மலையில் புனிதத்தை கெடுத்து விட்டார்கள்.
லட்டு பிரசாதம் தயார் செய்ய முழுவதுமாக கலப்படம் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தி வந்தனர்.
.
குறிப்பாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யை லட்டு பிரசாதம் தயாரிக்க ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பயன்படுத்தினார்கள் என்று பரபரப்பாக குற்றம் சாட்டினார்.
சுத்தமான நெய்யை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயார் செய்வதற்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட கலப்பட நெய்யை பயன்படுத்தி லட்டு தயாரித்து இருக்கிறார்கள்.
மேலும் படிக்க: ஆபரேஷன் தியேட்டரில் ஓடிய ஜூனியர் என்.டி.ஆர் படம்… வெற்றிகரமாக நடந்த சர்ஜரி.. வியந்து போன மருத்துவ உலகம்!
ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தரமான பொருட்களை பயன்படுத்தி பிரசாதங்கள் தயாரித்து வருகிறோம்.
கடந்த ஐந்தாண்டு கால ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அரசு ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கு உரிய தண்டனை அவர்களுக்கு கிடைத்த தீரும் என்று அப்போது கூறினார்.