அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிப் பேரணி : நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2023, 8:59 am

முன்னாள் தமிழ் நாடு முதலமைச்சர் அண்ணாவின் 54 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அமைதிப் பேரணியானது சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு வாலாஜா சாலையில் நடைபெற்று வருகிறது.

தற்போது வாலாஜா சாலையில் நூற்றூக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பேரணியில், திமுகஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலர்கள், தொண்டர்கள் என பலர் கலந்துள்ளனர்.

பேரணியின் முடிவில் தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

  • Vidamuyarchi Thaniye Song மனதை வருடும் ‘தனியே’ பாடல்..அப்போ விடாமுயற்சி காதல் கதையா..கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு ட்விஸ்ட்.!