பொறியியல் கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு… 15ம் தேதி நடக்கவிருந்த அண்ணா பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு…!!

Author: Babu Lakshmanan
10 May 2024, 8:20 am

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜுன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் 15ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த தேர்வுகள் ஜூன் 6ம் தேதி தொடங்கி நடைபெறும் என்று மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட இருக்கின்றன. 39 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெரும்பாலும் பொறியியல் கல்லூரிகளில்தான் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: அதிகாரிகளின் தவறுகளே காரணம்… பட்டாசு ஆலை வெடிவிபத்து விவகாரம்… திமுகவுக்கு கூட்டணி கட்சி திடீர் அழுத்தம்!!

இந்த சூழலில், செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது என்பது கடினமாக விஷயம் என்பதால் தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • Meenakshi Chaudhry மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?