ஆளுநரை சந்தித்து ஆதாரங்களுடன் அண்ணமாலை அளித்த புகார்.. பரபரப்பில் அறிவாலயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2023, 10:05 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி முவைத்த ராணுவ வீரருக்கும் திமுக கவுன்சிலருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதில் ராணுவ வீரர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ராணுவ வீரர் பிரபு மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் சென்னையில் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

மேலும் முன்னாள் ராணுவ வீரர்கள் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது. இதில் அண்ணாமலை பங்கேற்று திமுக மீது அடுக்கடுக்கான புகார்களை கூறினார். இந்த விவகாரம் குறித்து ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இரவு 7 மணிக்கு ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்தார். அப்போது ராணுவ வீரர் படுகொலை தொடர்பாக தமிழக ஆளுநரிடம் புகாரளித்தாக கூறப்படுகிறது.

  • Vijay And Trisha திரிஷாவை தவிர வேறு யார்? விஜய்யை சரமாரியாக விமர்சித்த பிரபல வாரிசு!