தமிழகத்தில் அதிமுக- பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூட்டணி உடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போது, பாஜகவை நாம் வலுப்படுத்த வேண்டும் தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை விரும்பவில்லை.
நம்முடைய முடிவை நாம் எடுப்போம் கட்சி பணியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என தெரிவித்து இருந்தார். இது பாஜக- அதிமுக இடையேயான உறவு பதம் பார்த்துள்ளது.
இந்தநிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
கடந்த இரண்டு நாட்களாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பற்றியோ ராஜினாமா என்று கூறியதோ அனைத்துமே பத்திரிகையாளர்களை சந்தித்து கூறாத விஷயங்கள்.
அவை கசிந்த வார்த்தைகளை தவிர அவர்கள் முறையாக கூறியது அல்ல என தெரிவித்தார். எனவே இதை பெரிதும் பொருட்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
கூட்டணி பற்றியோ வேட்பாளர்கள் பற்றியோ மாநிலத் தலைவர்கள் முடிவு செய்ய முடியாது என கூறினார். நாங்கள் சொன்னதை அறிவித்தாலும் சரி! அவர்கள் சொன்னதே அறிவித்தாலும் சரி, கூட்டணி குறித்தும் வேட்பாளர்கள் குறித்தும் மத்திய பாஜக முடிவு தான் இறுதியானது என கூறினார்.
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று கூப்பிடுவோம். ஆனா அதுவரை அத்தையே அத்தை என்றே கூப்பிடுகிறோம். இப்போது எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி வாக்குசாவடி பூத் உருவாக்கும் பணி மட்டுமே எனவே நாங்கள் அதை மேற்கொள்ள இருப்பதாக கூறினார்.
பாஜகவின் ஆதரவாளர்களும் சரி, தொண்டர்களும் சரி முழுமையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு முன்னதாக ஏதும் கட்டுக்கதைகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
திமுக தொண்டர்களை திமுக அமைச்சர்கள் கல்லைக் கொண்டு அடிக்கிறது, மண்டையில் அடிக்கிறது. இப்போது நடைபெற உள்ள திமுகவின் ஆட்சி கேங்ஸ்டர் என்று குறிப்பிடும் அளவில் உள்ளதாக விமர்சித்தார்.
உடைந்த பானை ஒட்டாது திராவிட முன்னேற்ற கழகம் இனி ஒரு கட்சியாக தமிழகத்தில் இருக்காது என குறிப்பிட்டார். திமுகவின் டி.என்.ஏ மொத்தமாக மாறிப் போய் உள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.