தப்பு இல்லைனு சொல்லல… ஆனா, அது தப்புதான்.. அதுக்கு-னு ரஜினியை அப்படி சொல்லலமா..? அண்ணாமலை கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
22 October 2022, 2:23 pm

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றவாளி யார் என்பது தெளிவாக கூறவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை ; தமிழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளும் பயிற்றுமொழி தமிழ் என தமிழக அரசு அறிவித்தால் வரவேற்கிறோம். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் எந்தவித புது தகவலும் இல்லை.

அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மீது பழிசுமத்துவது தவறானது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஆணையத்தின் அறிக்கையில் ஆசையை தூண்டும் விதமாகவே உள்ளதே தவிர தெளிவாக இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது கல்லெறிந்தவர்கள் எல்லோரும் சமூக விரோதிகள் தான்.

பொது சொத்துகளுக்கு சேதாரம் விளைவிப்பவர்கள் எல்லோரும் எங்கள் அகராதியில் சமூக விரோதிகள் தான். துப்பாக்கிச்சூடு நடத்தியது தவறு என்று சொல்லவில்லை ; துப்பாக்கிச்சூடு நடந்த விதம் தவறானது. சுட்டவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் ; ஆனால், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல.

அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்லி இருக்கிறார் என்று கூறுவது முற்றிலும் தவறானது. அருணா ஜெகதீசனின் ஆணைய அறிக்கையில் ரஜினிகாந்தின் கருத்தை பற்றி கூறியதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது, எனக் கூறினார்.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!