சாராய அமைச்சர் சரக்கு போட்டு பேசிருப்பாரு : அமைச்சரை விமர்சனம் செய்த அண்ணாமலை!!
Author: Udayachandran RadhaKrishnan15 April 2023, 7:42 pm
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ஊழல் என்று வந்த பின்னர் நண்பர்கள் அண்ணன் தம்பி என்றெல்லாம் பார்க்க கூடாது. தமிழகத்தில் ஒரு சாதாரண மனிதன் கூட ஊழல் பட்டியலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறான்.
எங்களுக்கு இங்கே யாரும் பங்காளிகள் கிடையாது. எங்களுக்கு எல்லோருமே பகையாளிகள் தான். யார் ஊழல் செய்திருக்கிறார்களோ அவர்களை பாஜக பகையாளிகளாக தான் பார்க்கும்.
ரபேல் வாட்ச் சீரியல் நம்பர் மாறி உள்ளது என்கிற கேள்விக்கு : சாராய அமைச்சர் சரக்கு போட்டு பேசி இருப்பார். 147 தான் என் வாட்ச் நம்பர் – மேடையில் படிக்கும் போது உடனே படித்துவிட்டேன்.
திமுக பட்டியலில் நான் வாசித்தவாறு எனக்கும் இந்த சொத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று திமுகவினர் இதுவரை ஒருவர் கூட சொல்லவில்லை.
கிட்டத்தட்ட 150 நிறுவனங்களை நாங்கள் சொல்லி உள்ளோம் – நான் ஓனர் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. அன்பில் மகேஷ் – உதயநிதி ஸ்டாலிணும் நோபில் ஸ்டீலில் நேரடியாக உள்ளார் – நோபல் ஸ்டீல் கம்பேனியின் டேரக்கடாராக இல்லை என்று உதயநிதி இதுவரை கூறவில்லை.
மனி லாண்டரிங் செய்து முதல்வர் 1000ம் கோடி கொண்டு வந்தார் என்பது எனது நேரடி குற்றச்சாட்டு. சிபிஐயில் இது குறித்து கம்ப்ளைன்ட் செய்ய உள்ளோம். டெக்னிக்கல் ஆடிட்டிங் தான் நாங்கள் கேட்பது – பழைய ஜாதகம் அல்ல நாங்கள் கேட்பது.
வாட்ச் விவகாரத்தில் நான் எச்சி வைத்து அழித்து விட்டு உங்களிடம் காட்டினேன். நான் இது வரை எந்த பணமும் கொள்ளையடிக்கவில்லை.
இங்கு ஒவ்வொரு அமைச்சர்களும் கிட்டத்தட்ட 10 பி .ஏ.க்கள் வைத்திருக்கிறார்கள்- 100 வேலை ஆட்களை வைத்திருந்தார்கள், அவர்களுக்கு சம்பளம் எப்படி வழங்குகிறார்கள்?
என்னுடைய பேங்க் ஸ்டேட்மெண்ட்டை 12 வருடமாக ஓப்பனாக நான் கொடுத்துள்ளேன் – என்னுடைய மூன்று பியேக்கு சம்பளம் எனது நண்பர்கள் அளிக்கிறார்கள்.
SWIGGYல் நான் சாப்பிடுவது உள்ளிட்ட பில்லை கூட என்னால் காட்ட முடியும் – நான் கேட்கிறேன் – ஒரு நாள் உங்களின் பேப்பரை காட்டுங்கடா பார்ப்போம் ..?
2024 பாராளுமன்ற தேர்தல் என்பது முழுக்க முழுக்க ஊழலை மையமாக வைத்து தான் இருக்கும். அடுத்த எட்டு மாசம் இன்னும் ரணகளமாக இருக்கும் – defamation case வந்து கொண்டே இருக்கும்.