ஊக்கம் மனதில் ஆக்கம் களப்பணியில் என்ற தலைப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு அளிக்கும் வகையில் பாராட்டு விழா நடைபெற்றது
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை பெரம்பூர் ரமணா நகரில் இங்கு இவரை யாம் பெருவே என்ன தவம் செய்து விட்டோம் ஊக்கம் மனதில் ஆக்கம் களப்பணியில் என்ற தலைப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களு க்கு பாராட்டு அளிக்கும் வகையில் பாராட்டு விழா நடைபெற்றது.
பகுதி கழக செயலாளர் I.C.F.முரளி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில் கழக முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, சிபிஎம் மாநில செயலாளர் கே .பாலகிருஷ்ணன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கிரிராஜன் MP மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டனர்.
அமைச்சர் கே.என்.நேரு மேடையில் பேசும் போது, இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி களும், விடுதலை சிறுத்தை களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என அனைவருமே தலைவரை பாராட்டு கின்றனர் அந்த அளவிற்கு இந்த தோழமையும் நடத்திக் கொண்டிருக்கிறா ர்கள். அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய சிறப்பு.
15வது பொது தேர்தல் கலைஞரை காட்டிலும் மிகச் சிறப்பாக இந்த தேர்தல் நமது தலைவர் நம் நாட்டு முதலமைச்சர் அவர் கள் நடத்தி முடித்திருக் கிறார்.
அனைத்து தோழர்களையும் அரவணைத்து இந்த கழகத் தேர்தலை முடித்து இரண்டா வது முறையாக அவர் தலைவராக வந்திருக்கி றார்.
மேலும் பல முறை அவர் தான், நிச்சயமாக அவர் இருக்கிற வரை அவர் தான் தான் தலைவராக இருப்பார். அது தான் சரி. மீண்டும் பலமுறை தலை வராக வந்து தமிழ் மக்களு க்கு நல்ல வழி காட்டுவார் என்ற நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கழகத்தை வழி நடத் துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கலைஞர் அவர்கள் 50 ஆண்டு காலம் வழி நடத்தினார். தளபதி அவர்கள் இன்றைக்கு பத்தாண்டு காலம் வழி நடத்தி இருக்கிறார் என்று சொன்னால் இந்த கழகத்தினுடைய இந்த கழகத்தை கட்டி காத்து வந்திருக்கிறது அந்த வகையிலே நம் முடைய தலைவர் அவர்கள்.
ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்துகிறார் மறு பக்கம் தமிழ்நாட்டு முதலமைச்சராக வழி நடத்துகிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன் ஏழு வாக்குறுதிகளை தந்துள்ளார், அதனை நோக்கி ஆட்சி நடத்துகிறார்
பள்ளிகள்விக்கு 34 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கி உள்ளார், மருத்துவத்திற்கு என பல துறைக்கு அவர் வாக்குறுதி மட்டுமில்லாமல் அதற்கான நிதியும் ஒதுக்கி உள்ளார்.
ஒன்றிய அரசு ஜிஎஸ்டி பணம் தந்தீங்களா, எதுக்காவது இந்த ஒன்றிய் அரசில் இருந்து வர வேண்டிய நிதியை கொடுத்தீர்களா..?
பணத்தை தர வேண்டியது கூட பரவாயில்லை சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய 34 சட்டங்களுக்கு கூட கையெழுத்து போடாமல் இருக்கிறார் தமிழ்நாட்டு கவர்னர் அவர்கள்.
எங்களை கேடி என்று சொல்கிறார் தமிழ்நாட்டு பிஜேபியை சேர்ந்த அண்ணாமலை அதை ஒரு நல்ல மனிதர் சொன்னால் பரவாயில்லை, எங்கள் முதலமைச்சர் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அவர் செயலில் செய்பவர்.
சென்னை மாநகரம் தோன்றி 330 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய்கள் அமைக்கும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.எல்லா இடங்களிலும் இந்த பணி கள் விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது
விரைவில் இந்த பணிகள் முடிவடைந்து அடுத்த மழைக்குள் ஒரு சிறப்பான மாநகரமாக திகழும். முதலமைச்சர் எங்களுக்கு கட்டளை இட்டு உள்ளார் அனைவருக்கும் சுத்தமான குடிநீர், கழிவுநீர் சரியாக போய் சேர வேண்டும், விளக்குகள் ஒழுங்காக எரிய வேண்டும், அனைத்து சாலைகள் முழுவதுமாக சரியாக இருக்க வேண்டும் அனைத்தும் வெறும் வார்த் தையாக இல்லாமல் அதற் கான நீதியை ஒதுக்கித் தந்துள்ளார்.
கால்வாய்கள் அமைக்கும் பணியில் பல்வேறு விஷயங்களை சரி செய்ய உள்ளது, விரைவில் அனைத்து பணியும் சரி செய்து சிறந்த மாநகரமாக மாறும்.
காமராஜர் வந்தார் மதிய உணவு திட்டம், எம்ஜிஆர் சத்துணவு திட்டம் ,ஜெயல லிதா சிறப்பு சத்துணவு திட்டமாக கொண்டு வந் தார். கலைஞர் முட்டை அளித்து அதை உண்மை யான சத்துணவு திட்டமாக் கினார். இன்றைக்கு தளபதி அவர்கள் யாருமே பார்க்காத வகையில் காலை உணவு கொண்டு ஒரு மிகப்பெரிய திட்டத்தை உருவாக்கியவர்.
மழைக்காலத்தில் வருகின்ற அதிகப்படியான தண்ணீரை குளங்களிலே யே நிரப்பி மக்களுக்கு விவசாயம் பெறுவதற்கான பணியை இந்த அரசு எடுத்து வருகிறது.
காலை உணவு திட்டம் மட்டுமல்ல பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் ரூபாய் ஆயிரம் ஒரு பக்கம் இயக்கம் ஒரு பக்கம் ஆட்சி என இரண்டையுமே தலை வர் அவர்கள் சிறப்பாக செய்து கொண்டு வருகிறார்.
90ல் இருந்து இன்று வரை அவர் போகாத இடம் இல்லை . நமது முதலமை ச்சர் அவர்கள் எதுவும் தெரியாது போல் இருப்பார் ஆனால் அவருக்கு அனைத்தும் தெரியும்
அவரை ராசி இல்லாத வர்கள் என்றெல்லாம் சொன்னார்கள் ஆனால் இன்று சட்டசபைக்கு வர முடியாத அளவிற்கு ராசிக் காரர்களாக உள்ளார்கள்.
ஒன்றை ஆண்டு காலம் சிறப்பாக பணியை நடத் திக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆகவே கழக தலைவராக வும் மக்களுக்காக பாடு படுகின்ற நமது முதல்வர் முதல்வர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.