அமலாக்கத்துறைக்கு அடுத்த HINT கொடுத்த அண்ணாமலை.. பத்திரப்பதிவுத் துறை அமைச்சருக்கு சிக்கல்!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2024, 9:19 pm

அமலாக்கத்துறைக்கு அடுத்த HINT கொடுத்த அண்ணாமலை.. பத்திரப்பதிவுத் துறை அமைச்சருக்கு சிக்கல்!

மதுரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். குறிப்பாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், தமிழகத்தில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாடு, மத்திய நிதியைமச்சர் நிர்மலா சீதாரமனுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில், அமலாக்கத்துறை விவசாயிகளுக்கு அளித்த சம்மன், தமிழகத்தில் பாஜக நாடாளுமன்றத்தில் அமைக்க போகும் கூட்டணி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

பத்திரப்பதிவு குறித்து பேசுகையில், தமிழகத்தில் பத்திரப் பதிவுத்துறையில் இமாலய ஊழல் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் ஒரு பத்திரத்துக்கு ரூ.5500 வசூலிக்கப்படுகிறதும் என்றும், இதை அமைச்சருக்கான கட்டணம் என்று கூறுகிறார்கள் என்றும் அண்ணாமலை பெரும் குற்றச்சாட்டை கூறினார்.

மேலும் தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் லாபி நிலவுவதாக கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சில புரோக்கர்களை பார்த்து பணம் கொடுத்தால் இரவு 6 மணிக்கு மேலும் பத்திரப் பதிவு செய்யலாம் என்றும் பத்திரப் பதிவுத்துறையில் ஊருக்கு ஊர் ஒரு புரோக்கர் உள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.

தமிழக பத்திரப் பதிவுத்துறையை மிக மோசமாகவும், பணம் வசூலிக்கும் துறையாகவும் துறையின் அமைச்சர் மூர்த்தி மாற்றி வைத்துள்ளதாக குற்றம்சாட்டிய அண்ணாமலை, இதை கண்டித்து பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு முன்பு பாஜக போராட்டம் நடத்தும் என்றும், பத்திரப் பதிவு அலுவலகங்களிலும், புரோக்கர்கள் வீடுகளிலும் மாலை 5 மணிக்கு மேல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினால் கட்டு கட்டமாக பணம் எடுக்கலாம். இப்பணத்தை வைத்து தமிழகத்தின் கடனை அடைத்துவிடலாம் என்றும் அண்ணாமலை விமர்சித்தார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…