ஒரே நேரத்தில் வந்த அண்ணாமலை, ஆளுநர் :சூழ்ந்து கொண்ட பாஜகவினர்… திணறிய போலீசார்.. கடுப்பான அண்ணாமலை செய்த செயல்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2023, 11:27 am

ஒரே நேரத்தில் வந்த அண்ணாமலை, ஆளுநர் :சூழ்ந்து கொண்ட பாஜகவினர்… திணறிய போலீசார்.. கடுப்பான அண்ணாமலை செய்த செயல்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பாஜக மாநில செயலாளர் அஸ்வர்த்தமன் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உளுந்தூர்பேட்டைக்கு வருகை தந்தார் திருமண விழாவில் பங்கேற்ற பாஜக தலைவர் அண்ணாமலை மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தார் தொடர்ந்து திருமண மஹாலில் இருந்து கிளம்ப முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் தொண்டர்களிடமிருந்து வெளியேற முடியாமல் அண்ணாமலை திணறினார்.

மேலும் பாதுகாப்பு பணியில் போதிய காவலர்கள் இல்லாததால் செய்வதறியாது காவலர்களும் திகைத்து நின்றனர். இந்த நிலையில் மணமக்களை வாழ்த்தி விட்டு மேடையில் இருந்து கீழே இறங்கிய பாஜக தலைவர் அண்ணாமலையை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் அவர் வெளியேற முடியாமல் திணறிய நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசார் இல்லாததால் கோபமடைந்த அண்ணாமலை அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தார்.

அப்போது அங்கு இருந்த போலீசாரிடம் ஏன் முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியாதா என கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,


தமிழக ஆளுநர் வந்து செல்வதற்கு எந்த விதமான இடையூறும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் பாஜக மாநில தலைவரை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேற விடாமல் செய்ததால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோபமடைந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

இதனை தொடர்ந்து காவல்துறையினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் தமிழக ஆளுநர் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஒரே நேரத்தில் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் யாருக்கு பாதுகாப்பு அளிப்பது என தெரியாமல் திகைத்து நீண்ட நிலையில் பாஜக மாநில தலைவர் உரிய பாதுகாப்பு வழங்க முடியாத என காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

  • AR Murugadoss about SIkandar movie remake of Thalapathy's Sarkar விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!
  • Close menu