அண்ணாமலை ஒரு தமிழினத் துரோகி : முன்னாள் முதலமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!!!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2023, 9:51 pm

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி அமுதசுரபியை பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நஷ்டத்தில் இயங்கினாலும் சம்பளம் வழங்கி வந்தோம்.

ஆனால் தற்போது மத்திய மாநிலத்தில் ஒரே ஆட்சி உள்ளது. ஆனால் ஊதியம் வழங்கப்படவில்லை. தற்கொலைக்கு தூண்டுகின்ற ஒரு அரசுக்கு மக்கள் வாக்களித்துள்ளனரா?.‌

ஒட்டுமொத்தமாக நிதி பற்றாக்குறையால் இந்த அரசு சிக்கி தவிக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை புதுச்சேரியில் ஆளும் இந்த அரசில் உள்ளது என்றார்.

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்துள்ளார். புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர் பாஜகவை சேர்ந்தவர் தான். கூட்டணி ஆட்சியில் இருப்பதால் முதலமைச்சர் ரங்கசாமி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கவில்லை.


பலர் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் முதலமைச்சர் ரங்கசாமி உடனடியாக ஒரு சட்டத்தை கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்ய வேண்டும். கர்நாடகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதனால் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பிரகாசமாக உள்ளது. கர்நாடகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அதை வேடிக்கை பார்த்தார். அவர் ஒரு தமிழின துரோகி என்று குற்றஞ்சாட்டினார்.

  • anirudh music for village subject directing by tamizharasan pachaimuthu கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!