அழிவை நோக்கி செல்கிறார் அண்ணாமலை… அதிமுகவை விமர்சிக்கும் தகுதி அவருக்கு இருக்கா? ஜெயக்குமார் ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2024, 1:32 pm

அண்ணாமலை கட்சி தலைவர் போல் அல்ல கார்பரேட் மேலாளர் போல் செயல்படுகிறார்.

அதிமுகவை தொட்டுப்பார்த்தால் அவன் கெட்டுப்போவான். ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் அண்ணாமலையால் அதிமுகவை அழிக்க முடியாது.

அடுத்த முறை பாஜகவால் ஒரு எம்எல்ஏ சீட்டு கூட ஜெயிக்க முடியாது. தமிழகத்தில் பாஜகவிற்கு ஆட்சி என்பது கானல் நீர்தான் . எந்த கொம்பன் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.

திமுகவில் உட்கட்சி பிரச்சனை நீறுபூத்த நெருப்பாக புகைகிறது எப்போது வேண்டுமானாலும் எரிமலையாக வெடிக்கும்.

ரஜினியின் பேச்சு முழுக்க முழுக்க ஸ்டாலின் முன்மொழிந்து , உதயநிதி வழிமொழிந்து பேசப்பட்டதுதான். – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர்,

விபரீத புத்தியால் தரம் தாழ்ந்த விமர்சனம் , அழிவை நோக்கி செல்கிறார் அண்ணாமலை. அதிமுகவை விமர்சிக்கும் யோக்கிதை , தகுதி அண்ணாமலைக்கு உண்டா.?

மாநில தலைவருக்கு லாயக்கு இல்லாதவர் அண்ணாமலை. அரசியலில் விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அண்ணாமலையின் பேச்சுத் தொனி சரியாக இல்லை.

அண்ணாமலை பாஜக எனும் கார்பரேட் நிறுவன மேனேஜர்தான் , மாநிலத் தலைவர் இல்லை.முதல்வரின் ஆட்டத்துக்கு ஏற்ப அண்ணாமலை ஆடுகிறார்.

பாஜக திமுக ரகசிய கூட்டணி குறித்து நாங்கள் கூறியதை அண்ணாமலை எதிர்க்காதது ஏன்.? முதல்வர் ஸ்டாலின் பேச்சை கேட்டு நடக்கிறார் அண்ணாமலை. 3 ஆண்டு அரசியல் மட்டுமே அண்ணாமலையின் தகுதி. எடப்பாடி கிளைச் செயலாளராக இருந்து முதல்வராக வந்தவர் கற்பனையில் மிதக்கும் மின்மினி பூச்சி அண்ணாமலை.

திராவிட இயக்கத்தை அழிப்பதாக அண்ணாமலை கூறியதை திமுக ஏன் எதிர்க்க வில்லை.?அண்ணாமலை விட்டில் பூச்சி , அதிமுக ஆலமரம்.

அதிமுகவை தொட்டுப்பார்த்தால் அவன் கெட்டுப்போவான். ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் அண்ணாமலையால் அதிமுகவை அழிக்க முடியாது.

அரசியலில் 3 ஆண்டு குழந்தை அண்ணாமலை , 50 ஆண்டுகால அரசியல் அனுபவம். கொண்ட இயக்கங்களை அழிக்கப்போவதாக கூறுகிறார்.

முதல்வர் அமெரிக்கா செல்கிறார் , அண்ணாமலை லண்டன் செல்கிறார். இருவரும் அங்கு சந்தித்து என்ன பேசப் போகிறார்களோ என்னவோ தெரியவில்லை.

அண்ணாமலை ஒரு கார்பரேட் நிறுவன மேலாளர் , எடப்பாடி 2 கோடிக்கு மேல் தொண்டர்கள் கொண்ட இயக்கத்தின் தலைவர்.

பிரகாசமாக எரியும் பல்புகள் திடீரென பியூஸ் போய்விடும் , இப்போது அண்ணாமலையின் நிலைமை அதுதான் என்று நாட்டு மக்கள் பார்க்கின்றனர்.

அடுத்த முறை பாஜகவால் ஒரு எம்எல்ஏ சீட்டு கூட ஜெயிக்க முடியாது. தமிழகத்தில் பாஜகவிற்கு ஆட்சி என்பது கானல் நீர்தான் . எந்த கொம்பன் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.

ஸ்டாலின் ரஜினிகாந்தை வைத்து துரைமுருகனை மட்டம் தட்டியுள்ளார். துரைமுருகனும் ரஜினியை மட்டம் தட்டியுள்ளார்.

ரஜினியின் பேச்சு முழுக்க முழுக்க ஸ்டாலின் முன்மொழிந்து , உதயநிதி வழிமொழிந்து பேசப்பட்டதுதான் , பற்ற வச்சுட்டியே பரட்டைங்கற மாதிரி ரஜினி பற்றவைத்து விட்டார்.

திமுகவில் உட்கட்சி பிரச்சனை நீறுபூத்த நெருப்பாக புகைகிறது எப்போது வேண்டுமானாலும் எரிமலையாக வெடிக்கும். அமெரிக்கா செல்வதால் மத்திய அரசை பகைத்துக் கொள்ள ஸ்டாலின் விரும்பவில்லை.

மீனவர்கள் பலர் சிறையில் உள்ளனர் , அவர்களை மீட்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தரவில்லை.

தமிழகமே பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது நாடு எக்கேடு கெட்டால் என்ன நான் அமெரிக்கா செல்கிறேன் என புறப்படுகிறார். கடந்த கால முதலீட்டு பயணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

சென்னையில் கார் பந்தயத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட போகிறது , தமிழக வீரர் ஒருவர் கூட அந்த போட்டியில் பங்கேற்கவில்லை. மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர் . பணக்காரர்கள் விளையாட்டு அது.

ரோம் நகரம் எரிந்தபோது பிடில் வாசித்த மன்னன் போல உள்ளது முதல்வர் செயல்.

தனது அமைச்சரவை சகாக்களேயே முதல்வரால் நம்பமுடியவில்லை. உதயநிதி என்ன பெரிய அறிவாளியா..? மத்திய அரசிடம் காபந்து பொறுப்பை ஒப்படைப்பது போல் உள்ளது முதல்வரின் செயல்.

முடிந்தால் பாஜக தனியா நின்று தனது செல்வாக்கை நிரூபிக்கட்டும் , பூத்களில் கூட ஆள் இல்லை . ஒரு எம்எல்ஏ சீட்டு கூட வாங்க முடியாது. 2026 ல் பாஜக நோட்டாவுடன்தான் போட்டியிடும்.

எம்ஜிஆர் ஒரு வரலாறு உலகம் உள்ளவரை அவரது புகழ் நிலைத்திருக்கும். எம்ஜிஆர் போல் அரசியலில் யாராலும் வர முடியாது என ஆர்.எஸ்.பாரதி கூறியது மகிழ்ச்சி. உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது என்றார்.

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 213

    0

    0