பிளான் A அல்லது பிளான் B : டெல்லியில் திமுகவை வீழ்த்த காய் நகர்த்திய அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2023, 4:37 pm

டெல்லி சென்றுள்ள அண்ணாமலை பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, ஆளுநர், திமுக அரசு மோதல் போக்கு, கூட்டணி விவகாரங்கள், தமிழக அரசியல் கள நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை செய்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்க்கும் என அண்மையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். ஏற்கனவே பாஜக – அதிமுக கூட்டணிக்குள் புகைச்சல் இருக்கும் நிலையில், அவரது இந்த கருத்து மேலும் விரிசலை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறுகிறார்கள்.

அதேசமயம், கூட்டணியில் பாஜக கேட்கும் அதிக இடங்களை கொடுக்காமல் இருப்பதற்காகவும், அதிமுகவின் மற்ற அணிகளை கூட்டணிக்குள் கொண்டு வராமல் இருக்கவுமே இதுபோன்று அதிமுக தரப்பில் செக் வைப்பதாக கூறுகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்தும், அதிமுக-பாஜக உறவு குறித்தும் ஜேபி நட்டாவிடம் அண்ணாமலை பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மக்களவை தேர்தல் பணிகள், பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் அண்ணாமலை அவரிடம் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

அத்துடன், வருகிற 28ஆம் தேதி ராமேஸ்வரம் முதல் சென்னை வரை அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இது பாஜகவை தமிழகத்தில் வலுப்படுத்த உதவும் என அக்கட்சி நம்புகிறது. இதுகுறித்தும் ஜேபி நட்டாவிடம் அவர் பேசியதாக தெரிகிறது.

அண்ணாமலையின் நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கவும் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அமித் ஷா உடனான சந்திப்பின் போது, தமிழக அரசியல் களம், மக்களவை தேர்தல் பணிகள் குறித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலை டெல்லி பயணத்தில் செந்தில் பாலாஜி விவகாரமும் முக்கிய அம்சமாக இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

  • Mysskin controversial speech வாய திறந்தால் கெட்ட வார்த்தை…மேடை நாகரீகம் தெரியாதா…மிஷ்கினை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்கள்..!