பட்டி தொட்டி எங்கும் அண்ணாமலை… புதிய நம்பிக்கை : மேடையில் புகழ்ந்து தள்ளிய அமித்ஷா!!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2023, 6:16 pm

வேலூரில் நடைபெற்ற மத்திய பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- மத்தியில் ஊழலற்ற சிறப்பான ஆட்சி கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் 25 தொகுதிகளை வென்று கொடுக்க வேண்டும்.
3- வது முறையாக மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் அரசு அமைய உள்ளது.

தமிழின் தொன்மையான செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்தது பிரதமர் மோடிதான். இன்று காலை கட்சியின் அமைப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநில தலைவர் அண்ணாமலை எப்படி அதை நடத்தி கொண்டு இருந்தார் என பார்த்த போது எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது.

அதாவது, 25 தொகுதி இல்லை.. அதற்கும் மேலே பாராளுமன்ற தொகுதிகளை வென்று தமிழகத்தின் அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்க போகிறார்கள்.

தமிழ் மொழியையும் தமிழின் தொன்மையும் மேம்படுத்தும் வகையில் பல சிறப்புகளை மோடி சேர்த்து இருக்கிறார். நீட், சிஆர்.பிஎப், உள்ளிட்ட தேர்வுகளை தமிழில் எழுத வழிவகுத்தவர் பிரதமர் மோடி. 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு 2.47 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

2024 ல் மீண்டும் ஒருமுறை பாஜக 300 க்கும் அதிகமான தொகுதிகளை பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

  • Ajith Kumar Team Racing Challenges துபாய் ரேஸில் பல திக் திக் சவால்ககளை எதிர்கொள்ள போகும் அஜித் குழுவினர்… 24 மணி நேரம் எப்படிங்க..!
  • Views: - 371

    0

    0