நாள் குறித்த அண்ணாமலை? களத்தில் குதிக்கும் பாஜகவினர் : 2024 தேர்தலை நோக்கி அடுத்த குறி?!!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2023, 4:46 pm

எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமானதாகும். ஏற்கெனவே இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் கட்சி ஜெயித்திருந்தாலும் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் பாஜக இருக்கிறது.

ஏனெனில் 2025ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா வருகிறது. தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதே சில மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கிடைக்காமல் நீதிமன்றம் சென்றுதான் அனுமதி வாங்க முடிந்தது.

இதே அடுத்த ஆண்டு தேர்தலில் தோற்றுவிட்டால் நிச்சயம் இந்த பேரணியை நடத்த மல்லுக்கட்ட வேண்டியிருக்கும் என்பதால் 2024ம் ஆண்டு தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, இந்த தேர்தலில் பாஜக வென்று மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்று முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் எனும் பெருமையை மோடி பெறுவார். அந்த வகையிலும் 2024 நாடாளுமன்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வரும் விநாயகர் சதுர்த்தியன்று ஒவ்வொரு பூத்களிலும் பாஜக சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதன் மூலமாக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் தங்கள் இந்துத்துவ கருத்துக்களை எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது.

வழக்கமாக விநாயகர் சிலைகளை கரைக்க கொண்டு செல்ல இந்து முன்னணி போன்ற இந்துத்துவா அமைப்புகள்தான் முன்வரும். இந்த முறை அத்துடன் சேர்த்து பாஜகவே நேரடியாக களத்தில் இறங்க திட்டமிட்டிருக்கிறது.

அண்ணாமலையின் முதல்கட்ட யாத்திரை வரும் 22ம் தேதி முடிவடைகிறது. எனவே அதன் பின்னர் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 299

    0

    0