ஆளுநர் ஆர்என் ரவி முடிவுக்கு அண்ணாமலை எதிர்ப்பு? இலங்கை செல்லும் முன் பரபரப்பு கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2023, 11:41 am

ஆளுநர் ஆர்என் ரவி முடிவுக்கு அண்ணாமலை எதிர்ப்பு? இலங்கை செல்லும் முன் பரபரப்பு கருத்து!!

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை செல்ல சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். சங்கரய்யாவுடன் வேறு யாருக்கேனும் டாக்டர் பட்டம் வழங்க பரிந்துரைத்து பட்டியல் அனுப்பப்பட்டத என்ற விவரம் தனக்குத் தெரியாது என ஆளுநர் மாளிகையை கோர்த்துவிட்டுள்ளார்.

இதனிடையே தமிழ்நாட்டில் இன்னும் சாதிய வன்கொடுமைகள் நிகழ்வது தமக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் சாதிய வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் அறிக்கையொன்றின் வாயிலாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு தீர்மானம் நிறைவேற்றி அதற்கு அனுமதி வழங்க கோரி ஆளுநருக்கு அனுப்பியும் வைத்துள்ளது. ஆனால் ஆளுநர் ரவி அதற்கு இன்னும் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் இந்த முடிவை பாஜகவே ரசிக்கவில்லை என்பதை தான் அண்ணாமலை சூசகமாக தனது பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரரும், முதுபெரும் அரசியல் தலைவருமான சங்கரய்யா நூற்றாண்டுகளை கடந்து வாழக்கூடிய வரலாறாக திகழ்பவர்.

சங்கரய்யாவை ஆளுநர் அவமதிப்பு செய்துவிட்டதாக விமர்சனக்கணைகள் வீசப்படும் நிலையில், ஆளுநர் முடிவுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதை போல் அண்ணாமலையின் பேட்டி அமைந்துள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 370

    0

    0