இது 1967 இல்ல… எம்பி பதவிக்காக இப்படியா, டைம் வேஸ்ட்… திமுக எம்பி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை பதிலடி

Author: Babu Lakshmanan
14 June 2022, 11:53 am

பாஜக மற்றும் பிராமணர்கள் குறித்து பேசிய திமுக எம்பி ஆர்.எஸ். பாரதிக்கு மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பாஜகவினர் பதிலடி கொடுத்துள்ளனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சி மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதற்கான ஆதாரங்களையும் படிப்படியாக வெளியிட்டு வருகிறார். மேலும், இனி மாதாந்தோறும் திமுக ஆட்சியில் நடக்கும் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதனால், அண்ணாமலையை திமுக நிர்வாகிகள் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். அந்த வகையில், திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அக்கட்சியின் எம்பி ஆர்.எஸ். பாரதி, அண்ணாமலையையும், பிராமணர் சமுதாய மக்களையும் கடுமையாக தாக்கி பேசினார். என் ஜாதகம் மோசமான ஜாதகம் என்று அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும், நான் வழக்கு தொடுத்தால் நீ உள்ளே போய் விடுவாய் என்றும், சின்ன பையன் என்பதால் அண்ணாமலையை விட்டு வைப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், பிராமணர் அல்லாத தலைவராக இருப்பதால் அந்த உணர்வின் காரணமாக அண்ணாமலையை விட்டு வைத்திருப்பதாகவும், பிராமணர்கள் ஒன்று திரண்டு அண்ணாமலைக்கு எதிராக சதி செய்வதாகவும், கூட இருந்தே குழி தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள் பிராமணர்கள் என்று ஆர் எஸ் பாரதி சர்ச்சை கருத்தை கூறினார்.

அவரது கருத்திற்கு பாஜக மற்றும் பிராமண சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

ஆர்எஸ் பாரதியின் பேச்சை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “இந்த வெற்று மிரட்டல்களால் எந்த பயனும் இல்லை, திரு ஆர்.எஸ் பாரதி அவர்களே!. மாநிலங்களவைக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த உங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே; ஆதலால் சாதி வெறுப்பைத் விதைப்பதற்கு முயற்சி செய்து, காலம் கடத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். பாவம்!, இது 1967 கிடையாது…” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ஒரு குட்டி ஸ்டோரியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது, “உங்கள் ஜாதகம் மோசமான ஜாதகம் தான் ஆர்எஸ் பாரதி அவர்களே. தள்ளாத வயதில் விரைவில் சிறைக்கு செல்ல தயாராகுங்கள். அண்ணாமலை சின்னப்பையன் அல்ல சிங்கத்தலைவன் . திமுக என்ற குள்ள நரியை ஓட ஓட விரட்ட வந்த சிங்கம். அதனால் தான் திமுகவினர் கொலை மிரட்டல்கள் விடுக்கின்றனர்.

பிராமணர்கள் திருப்பி தாக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் தொடர்ந்து அந்த சமுதாயத்தை தாக்கும் திமுக கோழைகளே, தைரியமிருந்தால், திராணியிருந்தால், முதுகெலும்பிருந்தால் அண்ணாமலையின் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்து பாருங்கள். போனால் போகிறது என்று உங்களை பாஜக தான் விட்டு வைத்திருக்கிறது. ஒரு சாதியை இழிவுபடுத்தும் கேடுகெட்ட அரசியலை கைவிடுங்கள். இல்லையேல் விளைவுகள் விபரீதமாகும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் விடுத்துள்ள பதிவில், “ஆர்.எஸ்.பி ஒரு சாதியை நீதிபதி ஆக்குவதற்கு திமுக போட்ட பிச்சை என்று அவர் கூறினார். இப்போது அண்ணாமலை பிராமணர் அல்ல, பிற சாதி என்று ஆர்.எஸ்.பி கருணை காட்டுகிறார். அது பிராமணர்களா இருந்தால் என்ன செய்வார்? புடவையை இழுப்பாரா சட்டசபையில் பழைய நாட்கள் போல?,” என தெரிவித்துள்ளார்.

  • vijay is a comedian in politics statement by college student விஜய் ஒரு காமெடியன்- தவெக தலைவரை கண்டபடி விமர்சித்த கல்லூரி மாணவர்கள்…