பழங்குடி இனத்தவரை அடித்து துவைப்பதுதான் உங்க சமூக நீதியா..? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி!!

Author: Babu Lakshmanan
6 July 2022, 8:04 pm

திருவண்ணாமலையில் போராட்டம் நடத்திய பழங்குடி இனத்தவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பழங்குடி இனத்தவரின் பரிதாபநிலை என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் பட்டியில் இனத்தின் பழங்குடியினத்தவரான குறும்பர் இன மக்கள் பெரும் கூட்டமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் ஆதிவாசிகளுக்கான எஸ்.டி பிரிவில் ஜாதி சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

போலீசார் அடக்குமுறையில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்களும் குழந்தைகள் அடித்து விரட்டப்பட்டிருக்கிறார்கள், கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள், குறும்பா குறும்பர், குறும்பன்ஸ், குருமன் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இடப்பெயர்ச்சி செய்யும் இனத்தவரான இவர்களை பழங்குடியின பட்டியல் இனத்தவராக அங்கீகரித்து சாதி சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறும்பர் இனத்தவர்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

11 ஆண்டு காலமாக இவர்கள் பட்டியல் இன பழங்குடி இனத்தவரான சலுகையை பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள், சமீபத்தில் இந்த இனத்தின் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்னையும், மத்திய அமைச்சரையும், அமைச்சகத்தையும் தொடர்பு கொண்டு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பரிவோடு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து பாஜகவின் ஆதரவை தெரிவித்திருந்தோம்.

இவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வரும் 8ஆம் தேதி தமிழக முதலமைச்சர் திருவண்ணாமலை மாவட்டம் வர இருக்கும் நிலையில், அங்கு இருக்கும் மக்களின் குறைகளை பரிவோடு கேட்காமல் பலப்பிரயோகம் செய்து, பெண்களை குழந்தைகளை தாக்கி தமிழக அரசு எடுத்த கைது நடவடிக்கை எந்த வகையான சமூக நீதி. அறவழியில் அமைதி போராட்டம் நடத்தும் அப்பாவி பழங்குடி இன மக்களை, அடக்குமுறையை ஏவி விட்டு இவ்வகையான அதிகார அத்துமீறல்களை பலபிரயோகத்தை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 805

    0

    0