‘ரொம்ப பெரிய சாதனை பண்ணியிருக்கீங்க… சீக்கிரம் உங்கள மீட் பண்றேன்’.. திண்டுக்கல் மாணவியுடன் பேசிய அண்ணாமலை!!
Author: Babu Lakshmanan8 May 2023, 3:56 pm
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொதுடததேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தேர்வு முடிவுகளை தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
அதில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 600க்கு 600 பெற்று சாதனை படைத்துள்ளார். அண்ணாமலையார் மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணக்குப்பதிவியல், பொருளியல், கணினிப் பயன்பாடுகள் ஆகிய 6 பாடங்களிலும் நந்தினி முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாணவி நந்தினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வாழ்த்துக்களை கூறினார். மேலும், பெரிய சாதனையை படைத்திருப்பதாகக் கூறிய அவர், விரைவில் தமிழகம் வந்தவுடன் மாணவியை நேரில் சந்திப்பதாகக் கூறினார்.