அரசியல் என்றால் பொறுமை என்பதை தெரிந்து செயல்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் தனியார் நட்சத்திர ஓட்டலில் பா.ஜ.க. இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. அதில் அவர் பேசியதாவது :- பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, மோடியின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். அடுத்த 10 ஆண்டுகளில் இங்கு இருக்கும் அரசியலை பற்றி சிந்திக்க வேண்டும். தற்போதைய சூழலை விட்டு விடுங்கள். நரேந்திர மோடி ஒவ்வொரு காலக்கட்டத்தில் எப்படி செயல்பட்டார் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் சில அரசியலை செய்கிறார்கள் நானும் செய்யட்டுமா ? என்கிற எண்ணம் உங்கள் மனதில் வரக்கூடாது. வித்யாசமாக நீங்கள் என்ன செய்ய போகீறீர்கள். மக்கள் நலனுக்காக நீங்கள் என்ன செய்ய போகீறீர்கள் அதை என்னி பாருங்கள். உங்களை நோக்கி நீங்கள் மக்களை வசியப்படுத்துங்கள்.
கொடிசியாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நான் மேடையில் இல்லாமல் தொண்டரோடு தொண்டரோடு நான் நின்று பார்த்தேன். ஆனால் பல மாதம் கழித்து டெல்லியில் என்னை சந்தித்த முக்கியமான நிர்வாகி ஒருவர் நீங்கள் ஏன் மேடையில் அன்று ஏறவில்லை. நான் உங்கள் அருகில் தான் இருந்தேன். தற்போது கோவையில் ஏன் இப்படி பிரச்சினை என கேட்டார்..?
பாஜகவை பொறுத்துவரை எல்லா இடங்களில் இருந்தும் தகவல் தலைமைக்கு செல்லும் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. டெல்லியில் ஒரு ரோட்டில், ஒரு வீட்டில் நாலுப்பேர் சார்ந்த கட்சியாக காங்கிரஸ் உள்ளது. ஆனால் அப்படி பா.ஜ.க அல்ல. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த கட்சியில் நீங்கள் பணியாற்ற வேண்டும். இலக்கோடு நீங்கள் பயணிக்க வேண்டும்.
பிரதமர் என்னிடம் நீயும் பா.ஜ.கவில் காரிய கர்த்தா, நானும் காரிய கர்த்தா என்றார்.
முகம் தெரியாத நம் கட்சியை சார்ந்த உறுப்பினர்களிடம் நாம் பேச வேண்டும். அவர்களிடம் நாம் நெருங்கி பார்க்க வேண்டும். இது மோடியிடம் நான் கற்றுக் கொண்டது.
அடுத்த தலைமுறையினரை நம் கட்சியில் வளர்ப்பது நமது மிக முக்கியமான வேலை. இளைஞர் அணி தலைவனாக இருப்பவன் சுய ஒழுக்கத்தில், தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்தவனாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் நல்லதாக பாருங்கள். எந்த எருதை போட்டாலும் ஏர் ஓட்டுபவன் சரி இல்லை என்றால் அது கீழே இறங்காது. எல்லோரையும் பயன்படுத்த முடியும் என்று நம்புங்கள். அரசியல் என்றால் பொறுமை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் பேசினார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.