போன் காலில் மனம் விட்டு பேசிய அண்ணாமலை… பச்சைக் கொடியை நாட்ட பறக்க விடப்பட்ட வெள்ளைக் கொடி!!
Author: Udayachandran RadhaKrishnan28 March 2023, 9:16 pm
ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தது. நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியதால் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவித்தது.
சிறிது நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். எடப்பாடி பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளர். இந்த தகவலை அண்ணாமலை தனது ட்விட்டர் பதில் கூறியிருப்பதாவது, இன்று அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி அவர்களை தொலைப்பேசி வழியாக தொடர்புகொண்டு எனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து சி.டி நிர்மல் குமார் உள்பட முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் அடுத்தடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் இணைந்தார்.
அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துவிட்டு வந்த இவர்களை அதிமுக அரவணைத்து இருக்கக் கூடாது என்றும் கூட்டணியில் இருந்துகொண்டு அதிமுக செய்வது சரியல்ல எனவும் அண்ணாமலை ஆதரவு பாஜக நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் காட்டமாக கருத்து கூறியிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக அதிமுக – பாஜக நிர்வாகிகள் இடையே வார்த்தை போர் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் அண்ணாமலையும் அதிமுக கூட்டணிக்கு எதிரான கருத்தை கட்சி நிர்வாகிககளுடனான ஆலோசனையின் போது பேசியதாக செய்திகள் வெளியானது.
அடுத்தடுத்த நடைபெற்ற இந்த விவகாரங்களால் அதிமுக – பாஜக கூட்டணிக்குள் சலசலப்பு நிலவியது. இந்த நிலையில், அண்ணாமலை எடபபடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.