அரசியலில் இருந்து அண்ணாமலை தற்காலிக ஓய்வு? அடுத்த பாஜக தலைவர் யார்? டெல்லியில் பரபர!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2024, 4:33 pm

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தீவிர அரசியலில் இருந்து 6 மாதங்கள் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேற்படிப்பிற்காக லண்டன் செல்ல அனுமதி கேட்டு பா.ஜ.க. மேலிடத்திற்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளதாகவும், தற்போது வரை அவரது கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, அண்ணாமலை வருகிற செப்டம்பர் மாதம் லண்டன் செல்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர்.

இதற்காக லண்டன் செல்லும் அண்ணாமலை 6 மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார் என்று கடந்த வாரமே தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Aamir Khan Inroduce his 3rd lover 60 வயதில் 3வது திருமணம்… கல்யாண வயதில் உள்ள மகனை மறந்த பிரபல நடிகர்!