தமிழக பாம்பு பிடி நிபுணர்களுக்கு மத்திய அரசு கொடுத்த கவுரவம்… பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
26 January 2023, 9:05 am
Quick Share

சென்னை : தமிழக பாம்பு பிடி நிபுணர்களுக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்த நிலையில், பிரதமர் மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று மத்திய அரசின் விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப் பணி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டு மே 1ம் தேதி முதல் பத்மஸ்ரீ விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை நேற்று மத்திய அரசு அறிவித்தது.

அதில், தமிழகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களும் சமூக ஆர்வலர்களுமான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பாம்பு பிடிப்பது குறித்து உலக அளவில் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இருளர் சமுதாயத்தை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பாம்பு பிடி நிபுணர்கள் மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 392

    0

    0